Saturday, September 18, 2010

கோயில்களூக்கு அள்ளிக் கொடுக்கும் பக்தர்களே தமிழ்ப் பள்ளிகளுக்கும் அள்ளி கொடுங்கள் தமிழை வாழவைத்த புண்ணியம் உங்களை வந்து சேரும்

         புண்ணியத்தை தேடி கோயில்களுக்கு போகிறோம். வேண்டுதல் என்ற பெயரில் அள்ளி கொடுக்கிறோம். வழிப் பாட்டுத் தலங்களை மேம்படுத்த நாம் வழங்கும் நிதி  சமய வளர்ச்சிக்கும் பாது காப்பாக இருக்கிறது. ஆண்டவன் சன்னதிக்கு நாம் காட்டும் ஆர்வம் போன்று கல்வி கோயிலுக்கும்
நாம் வாரி வழங்கினால்,நம்முடை தாய்த் தமிழை வைத்த பெருமை  பக்தர்களை வந்து சேரும்.தமிழ்ப் பள்ளி கட்டிடங்கள் கட்ட பக்தர்கள் அள்ளி வழங்கினால் , நன்கொடை வழங்கினால் , தமிழை வாழ வைத்தத புண்ணியம் ஒவ்வொருக்கும் வந்து சேரும் என்று   மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத் தலைவர் சு.வை.லிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

          100 தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆபத்து, போதுமான வதியில்லாததால் , தமிழ்ப் பள்ளியில் மாணவர்கள் அவதி என்ற  பத்திரிகைச் செய்தியை படித்தேன். இரவெல்லாம் தூக்கம் இல்லை. கனவில் ஓர் அசீரீர் வாக்கு கவலைப் படவேண்டாம் பக்தர்களுக்கும்  வசதிப் படைத்தவர்களுக்கும் வேண்டுகோள் விடுங்கள். தமிழ்ப் பள்ளியை காப்பாற்ற முன் வருவார்கள் என்பது தான். வசதிப் படைத்தவர்களில் பலர் நாட்டில் இருக்கிறீர்கள் . தமிழ்க்கு  உதவ முன் வரும்படி அன்பு வேண்டுகோள் வீடுக்க விரும்புகிறேன்.

           நாட்டில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. பக்தர்கள் நிறைந்து வழிகின்றனர். அந்த கோயில்களை நிர்வகிக்கும் தலைவர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கி தமிழ்ப் பள்ளிக்கு வழங்கலாமே. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது போல வசதிப் படைத்த கோயில்களின் நிர்வாகம் பரிசிலனைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். கோயில் நிர்வாகம் தங்களுக்கு பக்கத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளை தத்து எடுத்தாலே போதுமானது.

           கிள்ளான் சுந்தரராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்தை  எடுத்துக் காட்டாக எடுத்துக் கொள்ளலாம். அதன் தலைவர் ஆனந்தக் கிருஷ்ணன் கோயில் பணியோடு சேர்த்து கல்விப் பணி,இலக்கியப்பணி என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் செய்துவருகிறார். அந்த கோயில் நிர்வாகத்தை மற்றகோயில்களுகம் பின்பற்ற வேண்டுமென்பது நமது வேண்டுகோளாகும்.

           நாட்டுக் கோட்டை செட்டியார்களின் கோயில்கள் முருகனை வழிப்படும் முக்கியதளமாக இருந்து வருகின்றது. அப்பன் முருகன் மேல் அளப்பரிய பக்தி வைத்திருக்கும் செட்டியர்கள் தமிழூக்கும் தொண்டு செய்வதில் பின் வாங்கமாட்டார்கள் என்று நம்பலாம். தமிழுக்கு கடவுள் முருகன். அந்த தமிழுக்கு கோயில் கட்டினால்  அப்பன் முருகனுக்கு கோயில் கடியதாகுமே. பரிசிலனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள் . தமிழுக்கு செய்த உண்ணியம் உங்களை வந்து உங்களைச் சேரும்.

           யாழ்ப்பாணத் தமிழர்களும்  தங்கள் கோயில்கலை சிறப்பாக நடத்தி வருக்கிறார்கள். தமிழ் மொழியின்  வளர்ச்சிக்கு மனம் முன்வந்து  உதவவேண்டும். எங்கிருந்தாலும் நாம் தமிழர்கள் . நம் முடைய தாய்மொழி தமிழ்  . அம்மொழியைக் காப்பாற்ற தமிழ்ப் பள்ளியைக் காப்பாற்ற முன் வருவது ஒவ்வொரு தமிழனும் முன்வரவேண்டும்.       

           

2 comments:

  1. Congratulations. Wish you all the best.

    ReplyDelete
  2. மண்டோர் சுவை லிங்கம் கனவில் வந்த அசரீரி அரசாங்கத்துடன் தைரியமாகப் போராடி தமிழ்ப்பள்ளிகளுக்கான உரிமையைக் கேள்! என சொல்லவில்லையோ? மாறாக ஏழை இந்தியர்களிடமே மீண்டும் மீண்டும் சுரண்டி எடு என கூறிய அந்த கேவலமான அசரீரியை செருப்பால அடிக்க வேண்டும். உரிமையைக் கூட கேட்க வக்கில்லாத பல பொது அமைப்புகளில் மண்டோர் வேலை பார்க்கும் வெங்காயங்கள் சமுதாயத்திற்கு தேவை இல்லை!

    ReplyDelete