Thursday, October 14, 2010

சமூகச் சீர் கேடு கருத்தரங்கு

     13.11.10 ஆம் நாள் சனிக்கிழமை   காலை  மணி 8 முதல்  மாலை வரையில் மலாயாப் பல் கலைக் கழகத்தில்  சமூகச் சீர்கேடு மீதான கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து மலேசியாவில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கக் கூடிய   சமூக, சமய , அரசியல்  கட்சிகளின்  ஆதரவோடு  இக் கருத்தரங்கு நடத்தப் படவுள்ளது .

    மலேசிய இந்தியர்களிடையே நிலவி வரும் சமூக சீர் கேடுகள் பற்றி  ஆய்வு ஒன்றைச் செய்வதும் அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை விளங்கிக் கொள்வதும்  அதற்குரிய நடவடிக்கையில் ஈடுபடுவதும் இக் கருத்தரங்கின் நோக்கமாகும்.  சமூக சீர்கேட்டினை குறைப்பதற்கான பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எனவே அனைத்து இயக்கப் பிரதிநிதிகளும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வருமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    ம.இ.கா, இளைஞர் பிரிவு தலைவர் திரு.த.மோகன்  , மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் திரு.ஆர்.எஸ். மோகன்ஷான், மலேசிய இந்து தர்ம மாமன்றத் தலைவர் முனைவர்என்.எஸ். ராஜேந்திரன்  , மலேசிய இந்திய கலை கலாச்சார சங்கத் தலைவர் திரு.ப.ஆனந்தன்  , மலாயாப் பல்கலை கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் எஸ். குமரன் , மலேசியத் தமிழ் இலக்கிய கழகத்தின் திரு. மா.கருப்பண்ணன், மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் இளைஞர் பிரிவு தலைவர் திரு. பி.பன்னீர் செலவம் , மலேசியத் தமிழ்க் காப்பகத்தின் பொருளாளர் டத்தோ செல்லக் கிருஷ்ணன் ,இந்தியத்  திரைப்பட தணிக்கை வாரிய பிரதிநிதிகள், கிள்ளான் கிறிஸ்துவ இயக்கம் , உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முனைவர் கிருஷ்ணன் மணியம் , இந்திய ஆய்வியல் துறை வே.சபாபதி   உட்பட இருபத்தைந்து பேர் கலந்து கொண்ட கலந்துரையாடலில்   கருத்தரங்கு நடத்த ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது.

     தமிழ்த் திரைப் படங்கள், சின்னத்திரை நாடகங்கள் பற்றியும் பேசப் பட்டன . பிறப்புப் பத்திரம் அ.கா. இல்லாமையின் காரணமாக வேலை கிடைக்காமல் அவதிப்படுவது, பள்ளிகளில் மாணவர்களை இன துவேசத்திற்கு உட்படுத்துவது, பெற்றோர்களின் கண் காணிப்புக் குறைவின் காரணமாக  மாணவர்கள் தடம் புரண்டு போவது, முதலாம் படிவத்திற்கு முந்தைய புகு முக வகுப்பு நமக்கு வேண்டாம் என்பது பற்றியும் கருத்துக் கூறப்பட்டது.

     நாட்டில் உள்ள எல்லா இயக்கத்தலைவர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டு மென்று கருத்து தெரிவிக்கப் பட்டது. எனவே  சமூகத்திலுள்ள எல்லா தலைவர்களும் தனிப்பட்டவர்களும் கலந்துக்கொள்ளும்படி அழைக்கின்றோம் . உணவு , கோப்பு ஆகிய வை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்வதற்கு வசதியாக  பேராளர்கள் தங்களது  பெயர்கலைரை 31.10.10க்குள் பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புமுகவரி :     மா.கருப்பண்ணன் , செயலாளர்  ,கருத்தரங்கு ஏற்பாட்டுக் குழு
                         36 Jalan 25/43
                         Taman Sri Muda
                         40400 Shah AlaM
Email         :     vaiskaru @yahoo.com
Fax             :     0351221569
தொ.பேசி         : சு.வை.லிங்கம்   019 6011569  முனைவர் எஸ். குமரன் 012 3123753
                      மா.கருப்பண்ணன் 017 6767180
                              

Wednesday, October 6, 2010

மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாடு 2011

சா ஆலம் செப்.

                மலேசியாவில் தமிழர்களின் வரலாறு ஆய்வு செய்யப்படவேண்டும் என்ற அடிப்படை நோக்கத்திற்க்காக மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மலேசியாவிற்கு தமிழர்கள் வந்த காலம், மற்றும்  தொடர்ந்து மலேசியாவின் மேம்பாட்டிற்கு தமிழர்களின் ஆற்றியபங்கு குறித்தும் மாநாட்டில் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். கடாரம் கண்டான் இராஜேந்திர சோழன் என்று பெருமையாக பேசிக் கொள்ளும் நாம் நம் எதிர்கால சந்ததினர் விளங்கிக் கொள்வதற்காக என்ன முயற்சிகளை மேற்கொண்டோம் என்பது பரவலான கேள்விக் குறியாக இருக்கிறது.

                நம்முடைய எழுத்தாளர்கள்  பல ஆய்வு கட்டுரைகளையும் கதைகளயும் எழுதி இருக்கிறார்கள். பல்கலைகழத்தில் பட்டப்படிப்பிற்காக ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அக்கட்டுரைகள் தமிழர்கள் மத்தியில் பரவலாக பேசப்படவில்லை. எனக்கு தெரிந்தவரை ஈப்போ க.கலைமுத்து கடுமையாக முயற்சி செய்து நூல்  ஒன்றை வெளியிட்டிருகிறார். எழுத்தாளர் சந்திரகாந்தம் ,   ஜப்பானியர் காலத்தில் தமிழர்களின் வாழ்க்கை குறித்து  கிள்ளான்  அருண், கோல சிலாங்கூர் குணநாதன், இப்படி சிலர் நூல்களை வெளியிட்டிருக்கின்றனர். இப்படி எழுதப்பட்ட நூல்கள்  மக்களின் பார்வைக்கு பரவலாக கொண்டு வரப்படவிலை.

                ஆங்கிலேயர்கள் நம்மை சஞ்சிக்  கூலிகளாக கொண்டு வந்தார்கள் என்ற கதைகள் தான் நம் முன்னே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இது மட்டும் நமது வரலாறு இல்லை என்பதை உணரவேண்டும். இதற்கு முந்தைய நிண்ட வரலாறு நமக்கு உண்டு . அதற்காகத்தான் இம்மாநாடு கூட்டப்படுகிறது.  

                 மலாயாப் பல்கலை கழக இந்திய ஆய்வியல்  துறையுடன் இணந்து மலேசியாவிலுள்ள தமிழர் அமைப்பூகளின்   கூட்டு அமைப்பான மலேசியத் தமிழ்க் காப்பகம்  ஆய்வியல் மாநாட்டை 2011 சனவரித் திங்கள் 22,23 ஆகிய நாட்களில்  நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.கோலாலம்பூரிலுள்ள மலாயப் பல்கலை கழத்தில் நடத்த திட்டமிடப் பட்டுள்ள இம் மாநாட்டில் மொத்தம் 24 ஆய்வு கட்டுரைகள் இடம் பெறவுள்ளன. பல் கலைக்கழக மாணவர்கள்,  சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் பேராளர்களாக கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக  மாநாடு ஏற்பாட்டுக் குழுத்தலைவரும் மலேசீயத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத் தலைவருமான சு.வை.லிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெர்வித்துள்ளார்.

                மாநாட்டின் இணைத்தலைவராக மலாயாப் பல்கலைகழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் எஸ்.குமரன் பொறுப்பு வகிப்பார். மாநாட்டீன் தலைமை செயலாளராக  இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் வே.சபாபதி பொறுப்பு வகிப்பார்.

                மலேசியத் திராவிடர் கழகத்தலைவர் ரெ.சு.முத்தையா ,மலேசிய தமிழ் நெறிக் கழகத்தின் தலைவர் இரா. திருமாளவன் , மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தலைவர் துரைசாமி , மலாக்கா தமிழர் சங்கத்தின் தலைவர் தொ.கா.நாராயணசாமி, பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்கத் தலைவர்  க. முருகையன் , ஜோகூர் தமிழர் சங்கத் தலைவர் ந.வேணுகோபால், பேரா மாநில  எழுத்தாளர் சங்கத் தலைவர் இராம பெருமாள் ஆகியோர் உதவித் தலைவர்களாகவும்
             
                 இந்திய ஆய்வியல் துறையின் விரிவுரையாளர் குமாரி இரா. சீத்தாலட்சுமி ,ஆலமரம் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் புலவர் முருகையன் மலேசிய இந்திய கலை கலாச்சார மன்றத்தின் மகளிர்ப் பிரிவு தலைவர் திருமதி பத்மாவதி  ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும்  பொருளாளராக  மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் டத்தோ செல்லக்கிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

                 இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் , விரிவுரையாளர் த.மணிமாறன் ,விரிவுரையாளர் கோவி.சிவபாலன் ,மனித வளத்துறை அமைச்சை சார்ந்த நீலமேகன் ,திருத் தமிழ் வலைப் பதிவாளர் சுப.நற்குணன் பினாங்கு இந்திய மாணவர் பெற்றோர் சங்கத் தலைவர் ம. தமிழ்ச் செல்வன் ,திருக்குறள் பணிக் கழகத்தின்  பண்டிட் இலக்குமனன்,  உலகத் தமிழ் மாமன்ற தலைவர் வீரா, கோலாலம்பூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் காரைக் கிழார், மலேசியத் தமிழ் மணி மன்றத்தின்தேசியத் துணைத் தலைவர் கை.சிவப்பிரகாசம் ,

                  மலேசியத் தமிழப் பாண்பாட்டு இயக்கத்தின் தலைவர் ப.கு.சண்முகம், மலேசிய இந்திய கலை கலாச்சார மன்றத்தின்  தலைவர் ப.ஆனந்தன் , சிரம்பான் கம்பன் கழகத்தின் செயலாளர் திருமதி துளசி அண்ணாமலை , தமிழாசிரியர் இலக்கிய கழகத்தின் தலைவர் ந.பச்சை பாலன்,  தமிழ் இலக்கிகழ்கத்தின்  மா.கருப்பண்ணன், மற்றும் வே.விவேகானந்தன், அ.அலெக்சாண்டர் , பி.பன்னிர் செல்வம் , ஆர்.கணேசன் மலாய பல்கலைக் கழக தமிழ்ப் பெரவையின் மாணவர் தலைவர் உ.உகேந்த்ரன், கிள்ளான் கோவி பெருமாள் ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இது தவிர பல்வேறு துணைக்குழுக்களும்  அமைக்கப்பட்டுவருகிறது. குழுவில் பணியாற்ற விரும்பும் மற்ற இயக்கங்களையும் இணத்துக் கொள்ள முடிவு செய்யப் பட்டது.

               மாநாடு பற்றிய விபரம் அறிய                  
                                                முனைவர் கிருஷ்ணன் மணியம்
                                                 தலைமைச் செயலாளர்
                                                 மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாடு ஏற்பாட்டுக்குழு
                                                 இந்திய ஆய்வியல் துறை
                                                 மலாயாப் பல்கலைக் கழகம் , 50603 கோலாலம்பூர்

               அகப்பக்க முகவரி              tamizsemmozi.blogspot.com                       
               குறுந்தகவல் முகவரி           vaiskru @yahoo.com
               தொலைப் பேசி தொடர்பு      சு.வை.லிங்கம்            019 6011569     
                                                 முனைவர்  சு.குமரன்    012 3123753
                                                 முனைவர் முனைவர் கிருஷ்ணன் மணியம்