Tuesday, November 16, 2010

தமிழ் வாழ்த்து காரைக்கிழார் ,கோலாலம்பூர்

தாயே தமிழே என்மொழியே
தரணியில் மூத்த செம்மொழியே
சாதனை கண்ட சரித்திரமே 
சங்கம் வளர்த்த பெருந்திறமே               தாயே           

திரைகடல் ஓடிய காலத்திலும்
தினம் வேர்வை சிந்திய நேரத்திலும்
அம்மா என் ஆவியில் நிறைந்தவளே  
தலைமுறை தோறும் கலந்தவளே            தாயே

தோட்டத் துறைகளில்  வாழ்ந்தாலும்
துணையாகக் கோவிலில் இருந்தவளே
வாட்டங்கள் நீங்கிட ஒருநாளில்
வளமான நல்வாழ்வு தந்தவளே             தாயே

மதங்கள் பலவாயின் இருந்தாலும்
மனங்களில் தமிழாய் இணைந்தவளே  
நிறங்கள் கடந்து சோதரராய்
நீ தந்த அருளாலே உயர்வடைந்தோம்      தாயே

அரிச்சுவடி எனநீ  தொடங்குகிறாய்
அறிவாக நாவிலே அடங்குகிறாய்
பல்கலைக் கழகம் உருவாக்கி
பாருக்கே தலைமை நீயானாய்               தாயே


செம்மொழி அணிகலன் பூண்டவளே
சிலம்பும் மேகலையும் கொண்டவளே
அம்மா தமிழே வாழியவே
ஆழிபோல்  வானம்போல் வாழியவே         தாயே

                             

சமூகச் சீர் கேடு கருத்தரங்கு 5.12.10க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

     13.11.10ல் நடைப் பெறவிருந்த சமூக சீர்கேடு பற்றிய ஆய்வு கருத்தரங்கு தவிர்க்க முடியாத காரணங்களினல்  5.12.10 நாள் ஞாயிற்றுக்கிழமைக்கு  நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   காலை  மணி 8 முதல்  மாலை வரையில் மலாயாப் பல் கலைக் கழகத்தில்  கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து மலேசியாவில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கக் கூடிய   சமூக, சமய , அரசியல்  கட்சிகளின்  ஆதரவோடு  இக் கருத்தரங்கு நடத்தப் படவுள்ளது .

    மலேசிய இந்தியர்களிடையே நிலவி வரும் சமூக சீர் கேடுகள் பற்றி  ஆய்வு ஒன்றைச் செய்வதும் அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை விளங்கிக் கொள்வதும்  அதற்குரிய நடவடிக்கையில் ஈடுபடுவதும் இக் கருத்தரங்கின் நோக்கமாகும்.  சமூக சீர்கேட்டினை குறைப்பதற்கான பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எனவே அனைத்து இயக்கப் பிரதிநிதிகளும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வருமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

   
     தமிழ்த் திரைப் படங்கள், சின்னத்திரை நாடகங்கள் பற்றியும் பேசப் பட்டன . பிறப்புப் பத்திரம் அ.கா. இல்லாமையின் காரணமாக வேலை கிடைக்காமல் அவதிப்படுவது, பள்ளிகளில் மாணவர்களை இன துவேசத்திற்கு உட்படுத்துவது, பெற்றோர்களின் கண் காணிப்புக் குறைவின் காரணமாக  மாணவர்கள் தடம் புரண்டு போவது, முதலாம் படிவத்திற்கு முந்தைய புகு முக வகுப்பு நமக்கு வேண்டாம் என்பது பற்றியும் கருத்துக் கூறப்பட்டது.

     நாட்டில் உள்ள எல்லா இயக்கத்தலைவர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும். எனவே  சமூகத்திலுள்ள எல்லா தலைவர்களும் தனிப்பட்டவர்களும் கலந்துக்கொள்ளும்படி அழைக்கின்றோம் . உணவு , கோப்பு ஆகிய வை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்வதற்கு வசதியாக  பேராளர்கள் தங்களது  பெயர்களை  பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

அகப்பக்கமுகவரி:     tamaizsemmozi.blogspot.com   
Email         :     vaiskaru @yahoo.com
Fax             :     0351221569
தொ.பேசி         : சு.வை.லிங்கம்   019 6011569  முனைவர் எஸ். குமரன் 012 3123753

20 எழுத்தாளர்களின் சிறு கதை தொகுப்பு

   மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் மாறுபட்ட சிந்தனை கதைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. வாசகர்களுக்கு நல்ல விருந்து. அனுபவம் பெற்ற மூத்த எழுத்தாளர்கள் .புதிய சிந்தனையில் இளம் எழுத்தாளர்கள் எழுதியுள்ள 20   சிறு கதைகளை தொகுத்து மலேசியத் தமிழ் மணி  மன்றம் முதன் முதலாக நூலாக வெளியிடுகிறது. 28.11.10 ஆம் நாள்  மாலை மணி 4.00க்கு சா ஆலம் செக். 19ல் உள்ள Pusat Latihan Pengajar dan Kemakiran Lanjutan [CIAST]  Jalan Petani  19/1  , Sek.19 , Shah Alam . சா ஆலம் செக் 19 மின்சார இரயில் நிற்கும் இடத்திற்கு பக்கத்திலுள்ள  தொழிற்பயிற்சி மண்டபத்தில் நடைபெறுகிறது.

   மலேசிய மனித வள அமைச்சர் மாண்புமிகு டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் நூலை வெளியீடு செய்வார். கோலாலம்பூர்  சிரி கணேஸ் முதல் நூலைப்  பெற்றுக் கொள்வார்.மலாயாப் பல் கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் எஸ்.குமரன் சிறப்புரையாற்றுவார் 20 எழுத்தாளர்களையும் பாராட்டி பரிசு வழங்கப் படவிருக்கிறது.  வாசகர்களுக்கு மகிழ்வளிக்கும் வகையில்  எம்ஜி ஆர்தோற்றத்தில் ரவாங் அரியும், ரஜினி காந்த் தோற்றத்தில் மலேசிய ரஜினி  காந்த் புகழ் சந்திரன் ஆகியோர் நடிப்புடன் பாடலும்  தேவமலர் ஆறுமுகம், செல்வி மித்ரா சினி மோகன் நடனமும் ஆடுவார்கள்.

   சுங்கை சிப்புட் அருணாசலம், கோலாலம்பூர் மு.அன்புச் செல்வன் ,கோலாலம்பூர் மைதி சுல்தான் , மலாக்கா நேசமணி ஜோன் ,சிறம்பான் துளசியம்மா அண்ணாமலை ,கிள்ளான் டாக்டர் சி.சொக்கலிங்கம், கூலிம் எம்.சுப்பிரமணியம் ,செப்ராங் பிறை மாரியம்மாள் அர்ச்சுணன் ,குளுவாங் சுப்பிரமணியம் கிருஷ்ணன் , மேரு எஸ்.எம். ஆறுமுகம் ,சா ஆலம் சு.வை.லிங்கம் ,தாமான் மாசாய் ஜோகூர் கிருஷ்ணவேணி மைக்குமார் ,மலாக்கா ஆர்.சுலோச்சனா ,கிள்ளான் வே.மா. அர்ச்சுணன் , கிள்ளான் முருகையா முத்து வீரன் ,காப்பார் சந்திரா குப்பன் ,பாகான் செராய் வாணிஜெயராமன் ,பூச்சோங் உதயகுமாரி ,மலாக்கா வி.கோமளா,மலாயாப் பல் கலைக் கழக முனைவர் கிருஷ்ணன் மணியம் ஆகியோர் கதைகளை எழுதி உள்ளனர்.

  கைக்குழந்தையை கற்பழிக்கும் கயவன்,  தாலி கட்டிய மனைவிக்கு துரோகம் மனைவியும் மகளும் மரணம்,   கண் அறுவை சிகிச்சைக்குப் பின்  புதிய உலகைக் காணும்  சரவணன்,  நல்லவர்கள் வீட்டிலும் திருடர்களா?  இறைவன் சோதனைக்கு மேல்  சோதனைதான் தருகிறார். . கணவனின் கொடுமை தாங்காமல் விகாரத்து பெற்ற பின்னர்  நிம்மதியான வாழ்க்கை,  மாமியாரின் கொடுமை பேரப்பிள்ளையையும் உயிர் இழக்கச் செய்து விடுகிறது.  விதவை என்று துவண்டு போய்விடக் கூடாது, துணிந்து உழைத்தால் வெற்றி பெறலாம்  , அனாதைக்கு அடைக்கலம்,

  கம்னிஸ்ட்டுகளின் பயங்கர வாத போராட்டம் தமிழர்கள் பட்ட அவதி,  பல்கலைகத்தில் ரேகிங் பெற்றோர்களுக்கு கவலை அதிகரிக்கிறது. இனிப்பு நீர் வியாதி அம்மாவைக் கொன்று  விடுகிறது. மல்லிகைப் பூவையுமா திருடனும் ,மகனுக்கு சொல்லி வையுங்கள் . பெற்றோர்கள் பிள்ளைகளை செல்லமாக வளர்த்தால் போதைப்  பித்தர்களாக வேண்டுமா , அப்பா குடித்து விட்டு இறந்தார் ; அம்மா பிள்ளைகளை காப்பாற்ற அவதி .

  காதலிடம்  நேர்மையாக பழகினாலும்  மனைவிக்கு  வெறுப்பாகத்தான் இருக்கும். இரண்டாவது மனைவி வந்த நேரம் முதல் மனைவி பத்திரக் காளியானால் குடும்பமே அழிந்தது;பிள்ளை தனி மரமானது. உண்மையான பாசம் கல் மனசையும் கரைய வைக்கிறது  இது போன்ற சிந்தனையை தூண்டும் அற்புதமான சிறு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு  நூல் வாசகர்களுக்காக வெளியிடப் படுகிறது.
  
   வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து நூலைப் பெற்று செல்லுமாறு வாசகர்களை அன்போடு அழைக்கின்றோம் என நூல் வெளியீடு ஏற்பாட்டுக் குழுத் தலைவரும்  மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவருமான ம.ஆறுமுகம்  கேட்டுக் கொள்கிறார். தொடர்புக்கு  அ.அலெக்சாண்டர் 0126557186 எம். ஆறுமுகம்  0193363050 , பி.பன்னீர்செல்வம் 0193253554
 

Thursday, October 14, 2010

சமூகச் சீர் கேடு கருத்தரங்கு

     13.11.10 ஆம் நாள் சனிக்கிழமை   காலை  மணி 8 முதல்  மாலை வரையில் மலாயாப் பல் கலைக் கழகத்தில்  சமூகச் சீர்கேடு மீதான கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து மலேசியாவில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கக் கூடிய   சமூக, சமய , அரசியல்  கட்சிகளின்  ஆதரவோடு  இக் கருத்தரங்கு நடத்தப் படவுள்ளது .

    மலேசிய இந்தியர்களிடையே நிலவி வரும் சமூக சீர் கேடுகள் பற்றி  ஆய்வு ஒன்றைச் செய்வதும் அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை விளங்கிக் கொள்வதும்  அதற்குரிய நடவடிக்கையில் ஈடுபடுவதும் இக் கருத்தரங்கின் நோக்கமாகும்.  சமூக சீர்கேட்டினை குறைப்பதற்கான பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எனவே அனைத்து இயக்கப் பிரதிநிதிகளும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வருமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    ம.இ.கா, இளைஞர் பிரிவு தலைவர் திரு.த.மோகன்  , மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் திரு.ஆர்.எஸ். மோகன்ஷான், மலேசிய இந்து தர்ம மாமன்றத் தலைவர் முனைவர்என்.எஸ். ராஜேந்திரன்  , மலேசிய இந்திய கலை கலாச்சார சங்கத் தலைவர் திரு.ப.ஆனந்தன்  , மலாயாப் பல்கலை கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் எஸ். குமரன் , மலேசியத் தமிழ் இலக்கிய கழகத்தின் திரு. மா.கருப்பண்ணன், மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் இளைஞர் பிரிவு தலைவர் திரு. பி.பன்னீர் செலவம் , மலேசியத் தமிழ்க் காப்பகத்தின் பொருளாளர் டத்தோ செல்லக் கிருஷ்ணன் ,இந்தியத்  திரைப்பட தணிக்கை வாரிய பிரதிநிதிகள், கிள்ளான் கிறிஸ்துவ இயக்கம் , உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முனைவர் கிருஷ்ணன் மணியம் , இந்திய ஆய்வியல் துறை வே.சபாபதி   உட்பட இருபத்தைந்து பேர் கலந்து கொண்ட கலந்துரையாடலில்   கருத்தரங்கு நடத்த ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது.

     தமிழ்த் திரைப் படங்கள், சின்னத்திரை நாடகங்கள் பற்றியும் பேசப் பட்டன . பிறப்புப் பத்திரம் அ.கா. இல்லாமையின் காரணமாக வேலை கிடைக்காமல் அவதிப்படுவது, பள்ளிகளில் மாணவர்களை இன துவேசத்திற்கு உட்படுத்துவது, பெற்றோர்களின் கண் காணிப்புக் குறைவின் காரணமாக  மாணவர்கள் தடம் புரண்டு போவது, முதலாம் படிவத்திற்கு முந்தைய புகு முக வகுப்பு நமக்கு வேண்டாம் என்பது பற்றியும் கருத்துக் கூறப்பட்டது.

     நாட்டில் உள்ள எல்லா இயக்கத்தலைவர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டு மென்று கருத்து தெரிவிக்கப் பட்டது. எனவே  சமூகத்திலுள்ள எல்லா தலைவர்களும் தனிப்பட்டவர்களும் கலந்துக்கொள்ளும்படி அழைக்கின்றோம் . உணவு , கோப்பு ஆகிய வை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்வதற்கு வசதியாக  பேராளர்கள் தங்களது  பெயர்கலைரை 31.10.10க்குள் பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புமுகவரி :     மா.கருப்பண்ணன் , செயலாளர்  ,கருத்தரங்கு ஏற்பாட்டுக் குழு
                         36 Jalan 25/43
                         Taman Sri Muda
                         40400 Shah AlaM
Email         :     vaiskaru @yahoo.com
Fax             :     0351221569
தொ.பேசி         : சு.வை.லிங்கம்   019 6011569  முனைவர் எஸ். குமரன் 012 3123753
                      மா.கருப்பண்ணன் 017 6767180
                              

Wednesday, October 6, 2010

மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாடு 2011

சா ஆலம் செப்.

                மலேசியாவில் தமிழர்களின் வரலாறு ஆய்வு செய்யப்படவேண்டும் என்ற அடிப்படை நோக்கத்திற்க்காக மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மலேசியாவிற்கு தமிழர்கள் வந்த காலம், மற்றும்  தொடர்ந்து மலேசியாவின் மேம்பாட்டிற்கு தமிழர்களின் ஆற்றியபங்கு குறித்தும் மாநாட்டில் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். கடாரம் கண்டான் இராஜேந்திர சோழன் என்று பெருமையாக பேசிக் கொள்ளும் நாம் நம் எதிர்கால சந்ததினர் விளங்கிக் கொள்வதற்காக என்ன முயற்சிகளை மேற்கொண்டோம் என்பது பரவலான கேள்விக் குறியாக இருக்கிறது.

                நம்முடைய எழுத்தாளர்கள்  பல ஆய்வு கட்டுரைகளையும் கதைகளயும் எழுதி இருக்கிறார்கள். பல்கலைகழத்தில் பட்டப்படிப்பிற்காக ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அக்கட்டுரைகள் தமிழர்கள் மத்தியில் பரவலாக பேசப்படவில்லை. எனக்கு தெரிந்தவரை ஈப்போ க.கலைமுத்து கடுமையாக முயற்சி செய்து நூல்  ஒன்றை வெளியிட்டிருகிறார். எழுத்தாளர் சந்திரகாந்தம் ,   ஜப்பானியர் காலத்தில் தமிழர்களின் வாழ்க்கை குறித்து  கிள்ளான்  அருண், கோல சிலாங்கூர் குணநாதன், இப்படி சிலர் நூல்களை வெளியிட்டிருக்கின்றனர். இப்படி எழுதப்பட்ட நூல்கள்  மக்களின் பார்வைக்கு பரவலாக கொண்டு வரப்படவிலை.

                ஆங்கிலேயர்கள் நம்மை சஞ்சிக்  கூலிகளாக கொண்டு வந்தார்கள் என்ற கதைகள் தான் நம் முன்னே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இது மட்டும் நமது வரலாறு இல்லை என்பதை உணரவேண்டும். இதற்கு முந்தைய நிண்ட வரலாறு நமக்கு உண்டு . அதற்காகத்தான் இம்மாநாடு கூட்டப்படுகிறது.  

                 மலாயாப் பல்கலை கழக இந்திய ஆய்வியல்  துறையுடன் இணந்து மலேசியாவிலுள்ள தமிழர் அமைப்பூகளின்   கூட்டு அமைப்பான மலேசியத் தமிழ்க் காப்பகம்  ஆய்வியல் மாநாட்டை 2011 சனவரித் திங்கள் 22,23 ஆகிய நாட்களில்  நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.கோலாலம்பூரிலுள்ள மலாயப் பல்கலை கழத்தில் நடத்த திட்டமிடப் பட்டுள்ள இம் மாநாட்டில் மொத்தம் 24 ஆய்வு கட்டுரைகள் இடம் பெறவுள்ளன. பல் கலைக்கழக மாணவர்கள்,  சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் பேராளர்களாக கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக  மாநாடு ஏற்பாட்டுக் குழுத்தலைவரும் மலேசீயத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத் தலைவருமான சு.வை.லிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெர்வித்துள்ளார்.

                மாநாட்டின் இணைத்தலைவராக மலாயாப் பல்கலைகழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் எஸ்.குமரன் பொறுப்பு வகிப்பார். மாநாட்டீன் தலைமை செயலாளராக  இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் வே.சபாபதி பொறுப்பு வகிப்பார்.

                மலேசியத் திராவிடர் கழகத்தலைவர் ரெ.சு.முத்தையா ,மலேசிய தமிழ் நெறிக் கழகத்தின் தலைவர் இரா. திருமாளவன் , மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தலைவர் துரைசாமி , மலாக்கா தமிழர் சங்கத்தின் தலைவர் தொ.கா.நாராயணசாமி, பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்கத் தலைவர்  க. முருகையன் , ஜோகூர் தமிழர் சங்கத் தலைவர் ந.வேணுகோபால், பேரா மாநில  எழுத்தாளர் சங்கத் தலைவர் இராம பெருமாள் ஆகியோர் உதவித் தலைவர்களாகவும்
             
                 இந்திய ஆய்வியல் துறையின் விரிவுரையாளர் குமாரி இரா. சீத்தாலட்சுமி ,ஆலமரம் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் புலவர் முருகையன் மலேசிய இந்திய கலை கலாச்சார மன்றத்தின் மகளிர்ப் பிரிவு தலைவர் திருமதி பத்மாவதி  ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும்  பொருளாளராக  மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் டத்தோ செல்லக்கிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

                 இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் , விரிவுரையாளர் த.மணிமாறன் ,விரிவுரையாளர் கோவி.சிவபாலன் ,மனித வளத்துறை அமைச்சை சார்ந்த நீலமேகன் ,திருத் தமிழ் வலைப் பதிவாளர் சுப.நற்குணன் பினாங்கு இந்திய மாணவர் பெற்றோர் சங்கத் தலைவர் ம. தமிழ்ச் செல்வன் ,திருக்குறள் பணிக் கழகத்தின்  பண்டிட் இலக்குமனன்,  உலகத் தமிழ் மாமன்ற தலைவர் வீரா, கோலாலம்பூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் காரைக் கிழார், மலேசியத் தமிழ் மணி மன்றத்தின்தேசியத் துணைத் தலைவர் கை.சிவப்பிரகாசம் ,

                  மலேசியத் தமிழப் பாண்பாட்டு இயக்கத்தின் தலைவர் ப.கு.சண்முகம், மலேசிய இந்திய கலை கலாச்சார மன்றத்தின்  தலைவர் ப.ஆனந்தன் , சிரம்பான் கம்பன் கழகத்தின் செயலாளர் திருமதி துளசி அண்ணாமலை , தமிழாசிரியர் இலக்கிய கழகத்தின் தலைவர் ந.பச்சை பாலன்,  தமிழ் இலக்கிகழ்கத்தின்  மா.கருப்பண்ணன், மற்றும் வே.விவேகானந்தன், அ.அலெக்சாண்டர் , பி.பன்னிர் செல்வம் , ஆர்.கணேசன் மலாய பல்கலைக் கழக தமிழ்ப் பெரவையின் மாணவர் தலைவர் உ.உகேந்த்ரன், கிள்ளான் கோவி பெருமாள் ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இது தவிர பல்வேறு துணைக்குழுக்களும்  அமைக்கப்பட்டுவருகிறது. குழுவில் பணியாற்ற விரும்பும் மற்ற இயக்கங்களையும் இணத்துக் கொள்ள முடிவு செய்யப் பட்டது.

               மாநாடு பற்றிய விபரம் அறிய                  
                                                முனைவர் கிருஷ்ணன் மணியம்
                                                 தலைமைச் செயலாளர்
                                                 மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாடு ஏற்பாட்டுக்குழு
                                                 இந்திய ஆய்வியல் துறை
                                                 மலாயாப் பல்கலைக் கழகம் , 50603 கோலாலம்பூர்

               அகப்பக்க முகவரி              tamizsemmozi.blogspot.com                       
               குறுந்தகவல் முகவரி           vaiskru @yahoo.com
               தொலைப் பேசி தொடர்பு      சு.வை.லிங்கம்            019 6011569     
                                                 முனைவர்  சு.குமரன்    012 3123753
                                                 முனைவர் முனைவர் கிருஷ்ணன் மணியம்
              


Saturday, September 18, 2010

கோயில்களூக்கு அள்ளிக் கொடுக்கும் பக்தர்களே தமிழ்ப் பள்ளிகளுக்கும் அள்ளி கொடுங்கள் தமிழை வாழவைத்த புண்ணியம் உங்களை வந்து சேரும்

         புண்ணியத்தை தேடி கோயில்களுக்கு போகிறோம். வேண்டுதல் என்ற பெயரில் அள்ளி கொடுக்கிறோம். வழிப் பாட்டுத் தலங்களை மேம்படுத்த நாம் வழங்கும் நிதி  சமய வளர்ச்சிக்கும் பாது காப்பாக இருக்கிறது. ஆண்டவன் சன்னதிக்கு நாம் காட்டும் ஆர்வம் போன்று கல்வி கோயிலுக்கும்
நாம் வாரி வழங்கினால்,நம்முடை தாய்த் தமிழை வைத்த பெருமை  பக்தர்களை வந்து சேரும்.தமிழ்ப் பள்ளி கட்டிடங்கள் கட்ட பக்தர்கள் அள்ளி வழங்கினால் , நன்கொடை வழங்கினால் , தமிழை வாழ வைத்தத புண்ணியம் ஒவ்வொருக்கும் வந்து சேரும் என்று   மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத் தலைவர் சு.வை.லிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

          100 தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆபத்து, போதுமான வதியில்லாததால் , தமிழ்ப் பள்ளியில் மாணவர்கள் அவதி என்ற  பத்திரிகைச் செய்தியை படித்தேன். இரவெல்லாம் தூக்கம் இல்லை. கனவில் ஓர் அசீரீர் வாக்கு கவலைப் படவேண்டாம் பக்தர்களுக்கும்  வசதிப் படைத்தவர்களுக்கும் வேண்டுகோள் விடுங்கள். தமிழ்ப் பள்ளியை காப்பாற்ற முன் வருவார்கள் என்பது தான். வசதிப் படைத்தவர்களில் பலர் நாட்டில் இருக்கிறீர்கள் . தமிழ்க்கு  உதவ முன் வரும்படி அன்பு வேண்டுகோள் வீடுக்க விரும்புகிறேன்.

           நாட்டில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. பக்தர்கள் நிறைந்து வழிகின்றனர். அந்த கோயில்களை நிர்வகிக்கும் தலைவர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கி தமிழ்ப் பள்ளிக்கு வழங்கலாமே. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது போல வசதிப் படைத்த கோயில்களின் நிர்வாகம் பரிசிலனைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். கோயில் நிர்வாகம் தங்களுக்கு பக்கத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளை தத்து எடுத்தாலே போதுமானது.

           கிள்ளான் சுந்தரராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்தை  எடுத்துக் காட்டாக எடுத்துக் கொள்ளலாம். அதன் தலைவர் ஆனந்தக் கிருஷ்ணன் கோயில் பணியோடு சேர்த்து கல்விப் பணி,இலக்கியப்பணி என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் செய்துவருகிறார். அந்த கோயில் நிர்வாகத்தை மற்றகோயில்களுகம் பின்பற்ற வேண்டுமென்பது நமது வேண்டுகோளாகும்.

           நாட்டுக் கோட்டை செட்டியார்களின் கோயில்கள் முருகனை வழிப்படும் முக்கியதளமாக இருந்து வருகின்றது. அப்பன் முருகன் மேல் அளப்பரிய பக்தி வைத்திருக்கும் செட்டியர்கள் தமிழூக்கும் தொண்டு செய்வதில் பின் வாங்கமாட்டார்கள் என்று நம்பலாம். தமிழுக்கு கடவுள் முருகன். அந்த தமிழுக்கு கோயில் கட்டினால்  அப்பன் முருகனுக்கு கோயில் கடியதாகுமே. பரிசிலனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள் . தமிழுக்கு செய்த உண்ணியம் உங்களை வந்து உங்களைச் சேரும்.

           யாழ்ப்பாணத் தமிழர்களும்  தங்கள் கோயில்கலை சிறப்பாக நடத்தி வருக்கிறார்கள். தமிழ் மொழியின்  வளர்ச்சிக்கு மனம் முன்வந்து  உதவவேண்டும். எங்கிருந்தாலும் நாம் தமிழர்கள் . நம் முடைய தாய்மொழி தமிழ்  . அம்மொழியைக் காப்பாற்ற தமிழ்ப் பள்ளியைக் காப்பாற்ற முன் வருவது ஒவ்வொரு தமிழனும் முன்வரவேண்டும்.