மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் வரலாறு

வணக்கம்

மலேசியத் தமிழ் மணி மன்றம் தோன்றிய வரலாற்றை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக , விபரம் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

சு.வை.லிங்கம், S.Vaithlingam AMN;PBB தேசியத் தலைவர், Presiden

மலேசியத் தமிழ் மணி மன்றம்
KELAB BELL TAMIL MALAYSIA
தோற்றம் : 25.9 2008

மன்றம் தோன்றுவதற்கான காரணம் ;

தமிழ் மொழி , கலை, கலாச்சாரம் வளர்வதற்கு அல்லது பாது காப்பாற்றுவதற்கு தேசிய நிலையில் இயக்கம் தோற்று விக்கப் படவேண்டும் என்ற அடிப்படை நோகத்திற்காக தொடக்கப் பட்டது. இதற்கு உதவியாக தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் மூத்த தலைவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தொடங்கப்பட்டது.

என்னோடு உடன் இருந்து உதவி புரிந்தவர் கிள்ளான் ,பாடங் ஜாவா திருமிகு பொ.சங்கரன் ,

தமிழ் இளைஞர் மணி மன்றத்தில் பணியாற்றுபவர்கள்
40 வயதான பின்பும் தொடர்ந்து இளைஞர் இயக்கத்தில் பணியாற்ற முடியாது என்று அரசாங்கம் கட்டுப் படுத்தியதின் காராணமாகவும்

இளைஞர் இயக்கம் இளைஞர்களாலே நடத்தப் படவேண்டுமென்பதற்காகவும்

இளைஞர் இயக்கத்திலிருந்து வெளியேறும் தலைவர்களும் உறுப்பினர்களும் தொடர்ந்து சமூக இயக்கத்தில் பணியாற்ற வாய்ப்பை உருவாக்க படவேண்டும் என்பதற்காகவும்

இளைஞர் மணி மன்றத்தில் ஆற்றிய பணியில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதற்காகவும்

மலேசியத் தமிழ் மூத்தோர் மணி மன்றம் 26.9.2007 அமைக்கப்பட்டது. மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவை இந்த அமைப்புக் கூட்ட செலவுக்கு ரிங்.300 கொடுத்தது தைங்கு குறிப்பிடத் தக்கது.

மூத்தோர் மன்றத்தில் சேறுவதற்கான வயது 50 ஆக வரையறுக்கப்பட்டது. இளைஞர் இயக்கத்தின் வயது 40 என்று கட்டுப் படுத்தப் பட்டதால்,40க்கும் 50க்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகாலம் காத்திருந்து அதன் பின் தான் இளைஞர் இயக்க உறுப்பினர்கள் மூத்தோர் மன்றத்தில் சேர வாய்ப்பு கிடைக்கும்.

மன்றத்தில் உறுப்பினராக சேர வரும்புகிறவர்களின் வயது தொடக்கம் 50 க்கும் கூடுதலாகத்தான் இருக்கவேண்டுமென்று பதிவு இலாகா கட்டளை இட்டதின் காரணமாகவும்

தமிழ் இளைஞர் மணி மன்றத்தில் தமிழ் உணர்வோடு பணி ஆற்றிய 40 வயதிற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர் மணி மன்ற உறுப்பினர்களை 10 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர்தான் சேர்க்கப்படவேண்டுமென்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லாத காரணத்தினால் மூத்தோர் மணி மன்றத்தின் தொடக்க வயதை 41 ஆக குறைத்து பதிவதிகாரியிடம் மறு விண்ணப்பம் செய்தோம் .

41 வயது என்பது மூத்தோர் வயது அல்ல என்று பதிவு அதிகாரி கூறியதால் , வயது கட்டுப்பாடு நீக்கப்பட்டது. அதன்பின் மலேசியத் தமிழ் மணி மன்றம்- KELAB BELL TAMIL MALAYSIA என்று மறு பதிவு செய்யப்பட்டது.

தமிழ் மணி மன்றம் என்ற சொல் எல்லா காலத்திலும் நிலைத்து நிற்பதற்கு மலேசியத் தமிழ் மணி மன்றம் என்ற அமைப்பு தேவைப் படுகிறது என்று முழுமையான ஆதரவு தந்தவர் மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரைவையின் முன்னாள் தேசியத் தலைவர் சங்கநாதம் திருமிகு க. கிருகிநஷ்ணசாமி ஆவார்.

*****************
தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவையில் என்னுடைய பணி

சு.வை.லிங்கம்


இந்தக் கட்டுரையைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆரம்ப காலத்தில் மாணவர் மணி மன்றத்தில் உறுப்பினராக இருந்தேன் . முதன் முறையாக தெலுக்கிந்தான் கீழ்ப்பேரா தமிழ் இளைஞர் மணி மன்றத்தில் உறுப்பினராக இருந்தேன் . அதன் பின் வேலை நிமித்தம் சா ஆலமிற்கு குடியேறிய பின்னர் கிள்ளான் தமிழ் இளைஞர் மணி மன்றத்தில் உறுப்பினராக சேர்ந்து பணி யாற்றினேன்.

சிறிது காலத்திற்குப் பீன்னர் ஷா ஆலம் மன்றத்தில் உறுப்பினராக சேர்ந்த பின்னர் சிலாங்கூர் மாநில தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டேன்.

அப்போது தேசியத் தலைவராக இருந்த திரு .க. கிருஷ்ணனசாமி கேட்டுக் கொண்டதிற்காக மாநிலப் பொறுப்பேற்றேன் . மாநிலத் தலைவராக பொறுப்புக்கு வந்த போது மாநிலத்தில் 13 மன்றங்களே தேசியப் பேரவையில் உறுப்பியம் பெற்றிருந்தன.

சிலங்கூரிலும் கூட்டரசு பிரதேசத்திலும் செயல் பட்டு வந்த 10மன்றங்கள் தேசியப் பேரவையிலிருந்து விலகி தன்னிச்சையாக செயல் பட்டு வந்தன. நாட்டிலுள்ள இளைஞர் மணி மன்றங்கள் தனிப் பதிவைக் கொண்டிருக்கின்ற காரணங்களினால், அம் மன்றம் விரும்பினால் தேசியப் பேரவையில் இணந்து செயல் படலாம் . விரும்பாவிட்டால் தனியாக செயல் படலாம். அந்த நிலையில் நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக 10 மன்றங்களும் விலகி இருந்தன. நான் மாநிலப் பொறுப்பை ஏற்றப் பின்னர் கூட்டரசு பிரதேசம் தனியான நிர்வாகத்தைக் கொண்டு செயல் பட ஏற்படு செய்யப் பட்டது.

சிலாங்கூர் மாநிலம் தனியாக செயல் பட்டது. படிப்படியாக 70 க்கும் மேற்பட்ட மன்றங்களை அமைத்தேன்.மன்றங்கள் அமைக்க விரும்பிய அனைவருக்கும் மன்றம் அமைக்க வாய்ப்பு கொடுத்தேன்.

மகளிர் விழா என்ற பெயரில் ஆண்டு தோறும் பெரிய அளவில் விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்தேன். அந்நிகழ்ச்சி மாநிலத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.

ஏறக்குறைய 10 ஆண்டுகள் மாநிலத் தலைவராக இருந்தேன். கெடங்சாவில் மன்றம் அமைத்து , அதன் தலைவராக்கி மாநில துணைத் தலைவராகவும் ஆக்கி தேசிய நிர்வாக மன்ற உறுப்பினராகவும் என்னால் உயர்வுக்கு கொண்டு வரப்பட்ட
இ.மாரிமுத்து , மாநிலத் தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு , மாநிலப் பொறுப்புகளில் ஒதுங்கி விட்டேன். வேதனையோடு மாநில இளைஞர் மணி மன்ற தொடர்புகளை விட்டு விலகிக் கொண்டேன்.

மணி மன்றத்திலிருந்து விலகியப் பின்னர் எந்த பொது இயக்கத்த்லும்
பொறுப்பு வகிக்காமல் ம.இ.கா.வில் கிளைத்தலைவராக பொறுப்பு வகித்தேன். இப்போது கூட ம.இ.கா.கிளையின் தலைவராகத் தான் இருக்கிறேன். நான் ம.இ.கா.வில் தொடர்ந்து இருப்பது , அரசியலில் நம் இனம் பிளவு பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் ம.இ.கா. தான் சமூகத்தின் பாதுகாப்பிற்கு அரணாக இருந்து வருகிறது என்ற காரணத்திற் காகவும் ம.இ.கா.வில் எப்போதும் உறுப்பினராக இருந்து வருகிறேன்.

மாநிலப் பொறுப்பிலிருந்து விலகும் போது, தேசியப் பொதுச் செயலாளராக இருந்தேன். தேசியப் பேரவையில் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பின்னர் நானும் இளைஞர் மணி மன்றத்திலிருந்து ஒதுங்கியிருந்தேன்.

இளைஞர் மணி மன்றத்த்ல் தொடர்ந்து இருக்க நான் முயற்சி எடுக்கவில்லை. காரணம் இளைஞர் என்று சொல்லுவதற்கு வயது இளமையாக இருக்கவேண்டுமல்லவா? ஆனால்,
கனத்த மழை பெய்து ஓய்ந்த போதிலும் மழைத் தூறல் மட்டும் நிற்கவல்லை என்பார்கள். அது போல மணி மன்றப்பொறுப்புகளிலிருந்து விலகினாலும் மணி மண்டப் பொறுப்பிலீருந்து விலகிக் கொள்ள முடியவில்லை.

மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் முன்னாள் தேசியத் தலைவர் திருமிகு க.கிருஷ்ணசாமி காலத்தில் சிலாங்கூர் கிளானா ஜெயாவில் வாங்கப் பட்ட மன்ற கட்டிடத்தின் கடனுக்கு ஜாமின் கையெழுத்து போட்டவர்களில் நானும் ஒருவன். அது மட்டுமல்ல மண்டபத்தின் சொத்து காப்பாளராகவும் கையெழுத்து போட்டிருந்தேன்.

கட்டிடம் வங்கியபோது, மலேசியாவின் பொருளாதாரம் திடீர் என்று வீழ்ச்சி கண்டதால் , வாடகைக்கு விட முடியாத கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. நெருக்கடி ஏற்பட்டபோது உதவியவரும் மண்டபம் இன்று நிலையாக இருப்பதற்கும் காரணமாக இருந்தவர் மன்ற உறுப்பினர்கள் என்றும் நன்றி சொல்லி நினைவில் கொள்ளவேண்டியவர் மாண்பிற்கும் மரியாதைக்கும் உரிய ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டத்தோ சிரி ச.சாமிவேலு அவர்கள்.

[ இங்கு வருத்தத்திற்கு குரிய செய்தியை சொல்ல வேண்டுமென்று நினைக்கின்றேன் .நான் மணி மன்றப் பொருப்பிலிருந்து வெளியாகியப் பின்னரும் சொத்து காப்பாளராகவும் ஜாமின் தாரராகவும் தொடர்ந்த இருந்த எங்களின் பெயரை மலேசியத் தமிழ் மணி மன்றப் பேரவையில் தொலைத்து விட்டார்கள். காரணம் பேரவையின் ஆண்டறிக்கையில் எங்களின் பெயரைப் போடக்கூட மனம் இல்லாமல் இருந்தார்கள். ]

அதன் பின் ஏறக்குறைய 15 ஆண்டு இடை வெளிக்குப்பின்னர் மலேசியத் தமிழ் மணி மன்றத்தை அமைத்தேன். தமிழுக்கு அரணாக தமிழ் மணி மன்றம் இருக்கவேண்டுமென்பது தான் என் நோக்கமாகும். என்னோடு இப்போது இணந்து செயல் படுபவர்களும் அப்படிப்பட்ட நோக்கத்தைதான அடிப்படையாகக் கொண்டிருக்கிறார்கள்.