Tuesday, November 16, 2010

20 எழுத்தாளர்களின் சிறு கதை தொகுப்பு

   மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் மாறுபட்ட சிந்தனை கதைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. வாசகர்களுக்கு நல்ல விருந்து. அனுபவம் பெற்ற மூத்த எழுத்தாளர்கள் .புதிய சிந்தனையில் இளம் எழுத்தாளர்கள் எழுதியுள்ள 20   சிறு கதைகளை தொகுத்து மலேசியத் தமிழ் மணி  மன்றம் முதன் முதலாக நூலாக வெளியிடுகிறது. 28.11.10 ஆம் நாள்  மாலை மணி 4.00க்கு சா ஆலம் செக். 19ல் உள்ள Pusat Latihan Pengajar dan Kemakiran Lanjutan [CIAST]  Jalan Petani  19/1  , Sek.19 , Shah Alam . சா ஆலம் செக் 19 மின்சார இரயில் நிற்கும் இடத்திற்கு பக்கத்திலுள்ள  தொழிற்பயிற்சி மண்டபத்தில் நடைபெறுகிறது.

   மலேசிய மனித வள அமைச்சர் மாண்புமிகு டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் நூலை வெளியீடு செய்வார். கோலாலம்பூர்  சிரி கணேஸ் முதல் நூலைப்  பெற்றுக் கொள்வார்.மலாயாப் பல் கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் எஸ்.குமரன் சிறப்புரையாற்றுவார் 20 எழுத்தாளர்களையும் பாராட்டி பரிசு வழங்கப் படவிருக்கிறது.  வாசகர்களுக்கு மகிழ்வளிக்கும் வகையில்  எம்ஜி ஆர்தோற்றத்தில் ரவாங் அரியும், ரஜினி காந்த் தோற்றத்தில் மலேசிய ரஜினி  காந்த் புகழ் சந்திரன் ஆகியோர் நடிப்புடன் பாடலும்  தேவமலர் ஆறுமுகம், செல்வி மித்ரா சினி மோகன் நடனமும் ஆடுவார்கள்.

   சுங்கை சிப்புட் அருணாசலம், கோலாலம்பூர் மு.அன்புச் செல்வன் ,கோலாலம்பூர் மைதி சுல்தான் , மலாக்கா நேசமணி ஜோன் ,சிறம்பான் துளசியம்மா அண்ணாமலை ,கிள்ளான் டாக்டர் சி.சொக்கலிங்கம், கூலிம் எம்.சுப்பிரமணியம் ,செப்ராங் பிறை மாரியம்மாள் அர்ச்சுணன் ,குளுவாங் சுப்பிரமணியம் கிருஷ்ணன் , மேரு எஸ்.எம். ஆறுமுகம் ,சா ஆலம் சு.வை.லிங்கம் ,தாமான் மாசாய் ஜோகூர் கிருஷ்ணவேணி மைக்குமார் ,மலாக்கா ஆர்.சுலோச்சனா ,கிள்ளான் வே.மா. அர்ச்சுணன் , கிள்ளான் முருகையா முத்து வீரன் ,காப்பார் சந்திரா குப்பன் ,பாகான் செராய் வாணிஜெயராமன் ,பூச்சோங் உதயகுமாரி ,மலாக்கா வி.கோமளா,மலாயாப் பல் கலைக் கழக முனைவர் கிருஷ்ணன் மணியம் ஆகியோர் கதைகளை எழுதி உள்ளனர்.

  கைக்குழந்தையை கற்பழிக்கும் கயவன்,  தாலி கட்டிய மனைவிக்கு துரோகம் மனைவியும் மகளும் மரணம்,   கண் அறுவை சிகிச்சைக்குப் பின்  புதிய உலகைக் காணும்  சரவணன்,  நல்லவர்கள் வீட்டிலும் திருடர்களா?  இறைவன் சோதனைக்கு மேல்  சோதனைதான் தருகிறார். . கணவனின் கொடுமை தாங்காமல் விகாரத்து பெற்ற பின்னர்  நிம்மதியான வாழ்க்கை,  மாமியாரின் கொடுமை பேரப்பிள்ளையையும் உயிர் இழக்கச் செய்து விடுகிறது.  விதவை என்று துவண்டு போய்விடக் கூடாது, துணிந்து உழைத்தால் வெற்றி பெறலாம்  , அனாதைக்கு அடைக்கலம்,

  கம்னிஸ்ட்டுகளின் பயங்கர வாத போராட்டம் தமிழர்கள் பட்ட அவதி,  பல்கலைகத்தில் ரேகிங் பெற்றோர்களுக்கு கவலை அதிகரிக்கிறது. இனிப்பு நீர் வியாதி அம்மாவைக் கொன்று  விடுகிறது. மல்லிகைப் பூவையுமா திருடனும் ,மகனுக்கு சொல்லி வையுங்கள் . பெற்றோர்கள் பிள்ளைகளை செல்லமாக வளர்த்தால் போதைப்  பித்தர்களாக வேண்டுமா , அப்பா குடித்து விட்டு இறந்தார் ; அம்மா பிள்ளைகளை காப்பாற்ற அவதி .

  காதலிடம்  நேர்மையாக பழகினாலும்  மனைவிக்கு  வெறுப்பாகத்தான் இருக்கும். இரண்டாவது மனைவி வந்த நேரம் முதல் மனைவி பத்திரக் காளியானால் குடும்பமே அழிந்தது;பிள்ளை தனி மரமானது. உண்மையான பாசம் கல் மனசையும் கரைய வைக்கிறது  இது போன்ற சிந்தனையை தூண்டும் அற்புதமான சிறு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு  நூல் வாசகர்களுக்காக வெளியிடப் படுகிறது.
  
   வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து நூலைப் பெற்று செல்லுமாறு வாசகர்களை அன்போடு அழைக்கின்றோம் என நூல் வெளியீடு ஏற்பாட்டுக் குழுத் தலைவரும்  மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவருமான ம.ஆறுமுகம்  கேட்டுக் கொள்கிறார். தொடர்புக்கு  அ.அலெக்சாண்டர் 0126557186 எம். ஆறுமுகம்  0193363050 , பி.பன்னீர்செல்வம் 0193253554
 

No comments:

Post a Comment